தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வட்டார திட்ட அலுவலர் வேலைவாய்ப்பு TNRD Regional Planning Officer Recruitment 2023

TNRD Regional Planning Officer Recruitment 2023

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் அக்டோபர் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

ஊரக வளர்ச்சி துறை

வளரும் வட்டார திட்ட பகுதிகளின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை வடிவமைப்பு செய்தல் மற்றும் திட்டங்களை செயல்படுத்த வட்டார அளவிலான அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு தருதல் வேண்டும். திட்டங்களை செயல்படுத்துதல், சவால்களை கண்டறிதல், போன்றவைகளுக்காக தொடர்ச்சியாக களங்களை பார்வையிடல் போன்ற திறன் வேண்டும்.

வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு வட்டார மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு தகவல்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் பரிந்துரைகளை அளிக்க வேண்டும். உள்ளூர் சமுக மக்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிப் பட்டறைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், திறன் வளர்ச்சி பயிற்சிகள் செயல்படுத்த வேண்டும். சிக்கல்கள், சவால்கள் மற்றும் தேவை போன்றவற்றிக்காக மாநில மற்றும் NITI அளவில் இணைந்து பணியாற்ற வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட பிற பொறுப்புகளையும் மேற்கொள்ள வேண்டும்.

வட்டார திட்ட அலுவலர்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணிக்கு ஒரு காலியிடம் இருக்கிறது. பணியிடம் என்பது திருநெல்வேலி நாங்குநேரியில் இருக்கும். ஒரு வருட கால பணி மட்டுமே. அதாவது பதவியேற்ற நாளிலிருந்து 12 மாதங்கள் (அல்லது) நவம்பர் 2024 வரை இருக்கும்.

TNRD Regional Planning Officer Recruitment 2023
TNRD Regional Planning Officer Recruitment 2023

கல்வி தகுதிகள்:

தகுதியான கல்வி நிலையங்களில் முதுநிலை கல்வி பயின்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

பிற தகுதிகள்:

  • வளரும் வட்டார திட்ட அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தகவல்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் செயல்பாடுகளை விளக்கம் செய்யும் திறன் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • சமூக வலைதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
  • திட்டங்களை நிர்வாகப்படுத்தும் திறன் பெற்றிருப்பது அவசியம் ஆகும்.
  • வளர்ச்சி தொடர்பான நிறுவனங்களில் வேலை செய்திருப்பது அவசியம் ஆகும்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். பொதுவாக இந்த பணிக்கு ஊரக வளர்ச்சி தொடர்பாக உயர் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் மாத ஊதியம்: ரூ.55,000/- (மாத ஊதியம்) (வரி பிடித்தம் இருக்கும்)

தகுதி உள்ளவர்கள் திருநெல்வேலி மாவட்ட இணையதளமான https://tirunelveli.nic.in பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சி தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

1 thought on “தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வட்டார திட்ட அலுவலர் வேலைவாய்ப்பு TNRD Regional Planning Officer Recruitment 2023”

Leave a Comment

error: Content is protected !!