இந்த ஆண்டிற்கான TNPSC Group 4 அறிவிப்பு எப்போது வெளியாகும்? TNPSC Group 4 Notification 2023 date

TNPSC Group 4 Notification 2023 date

2023ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விரைவில் வெளியிடயிருப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

2023ம் ஆண்டிற்கான போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தினை டிஎன்பிஎஸ்சி முன்னதாக  வெளியிட்டது . இதில், பல இலட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், நவம்பர் 12-ஆம் நாள் தீபாவளி கொண்டாடப்படும்  நிலையில் ,அதற்கு முன்னதாகவே குரூப் 4 தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியாகும் என்றும் எதிரிபார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் காலியிடங்கள்:

தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 10 ஆயிரம் குரூப் 4 நிலை பணியாளர்கள் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். காலியாகும் பணிகளை நிரப்ப வேண்டும் என்றாலும் கூட, ஆண்டுக்கு 10,000 குரூப் 4 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், 2012-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 10,718, 2017-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,351, 2019-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,398, 2022ம் ஆண்டு அறிவிக்கையன் படி 10,117 என கடந்த 12 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் குறைவான குரூப் 4 பணியாளர்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.மேலும், தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே,  கடந்தாண்டை விட கூடுதலாக 5,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது 15,325 மேல் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகள், ஒரே நிலை எழுத்துத் தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதால், தேர்வர்களுக்குள் கடும் போட்டி நிலவும் என்றும், இதனால் கட்- ஆப் மதிப்பெண் அதிகரிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Group 4 Notification 2023 date
TNPSC Group 4 Notification 2023 date

குரூப் 4 தேர்வு எந்தெந்த பதவிகளுக்காக நடத்தப்படுகிறது?

  • ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத).
  • பில் கலெக்டர்.
  • தட்டச்சு செய்பவர்.
  • ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (கிரேடு -3).
  • கள ஆய்வாளர்
  • வரைவாளர்

குரூப் 4 தேர்வு (TNPSC Group 4 Exam) மேலே குறிப்பிட்டுள்ள 6 அரசு துறை பதவிகளுக்காக நடத்தப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 29 PSC தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வின் நேரம் மற்றும் தேர்வுக்கான தேதி மாநிலங்களுக்கு ஏற்றார் போல மாறுபடும்.

TNPSC குரூப் 4 தேர்வு எப்போது?

2023ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தொடர்பான அறிவிப்பாணை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு காலிப் பணியிடங்கள் உள்ளது என்பதற்கான விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் எப்போதும் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு உள்ள நிலையில் அது சார்ந்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இப்பணிகளுக்கு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானதும் எங்களின் கல்வி வேலைவாய்ப்பு குழுவில் அறிவிப்பு குறித்து பகிரப்படும். – Click here to Join our Group

இந்தியாவில் முக்கியமாக 2 வகையான PSC தேர்வு நடத்தப்படுகிறது. ஒன்று UPSC, அதாவது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேசிய அளவில் நடத்தப்படும் மத்திய அரசு தேர்வு. மற்றொன்று, PSC – அதாவது பொது சேவை ஆணையம் தேர்வு ஆகும்.

செய்தி தாளில் வெளியான அறிவிப்பு

TNPSC Group 4 Vacancy 2023

 

TNPSC Group 4 Pattern

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பாடத்திட்டத்திற்குச் (tnpsc group 4 exam pattern) செல்வதற்கு முன், முதலில் நாம் பார்க்க வேண்டியது தேர்வு முறை (Exam Pattern). குரூப் 4 தேர்வு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே இருக்கும். 200 கேள்விகள் அடங்கிய தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். அனைத்து கேள்விகளும் பல தேர்வு கேள்விகள் (MCQ வகை). அனைத்து பிரிவுகளும் புறநிலையாக இருக்கும் மற்றும் நிலை 10 ஆம் வகுப்பு மட்டுமே. TNPSC குரூப் 4 தேர்வுக்கான தாள் மூன்று பாடங்களைக் கொண்டுள்ளது. அதாவது,

1. பொது ஆய்வுப் பிரிவில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, அரசியல், பொருளாதாரம் போன்றவற்றிலிருந்து 75 கேள்விகள் உள்ளன.

2. பின்னர் 25 அப்ஜெக்டிவ் கேள்விகளுடன் ஆப்டிட்யூட் பிரிவை கொண்டுள்ளது. இது ஆர்வலர்களின் ஆப்டிட்யூட் & மென்டல் திறன் திறன்களை சோதிக்கிறது.

3. திருத்தப்பட்ட TNPSC குரூப் 4 பாடத்திட்டத்தின் PDF படி, பொது ஆங்கிலம்/பொது தமிழ் பிரிவு, TNPSC ஆல் அகற்றப்பட்டது.

4. 300 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகளைக் கொண்ட SSLC தரநிலையின் தமிழ் தகுதி மற்றும் மதிப்பெண் தேர்வை TNPSC இணைத்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி என்பது தமிழக அரசுப் பணிக்குத் (TNPSC Group IV) தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பாகும். அரசுப்பணியாளர் தேர்வாணையம் (PSC – Public Service Commission) இந்திய அரசால் 1929 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அந்தந்த மாநிலத்தின் பொது சேவையில் பணியாளர்களை சேர்ப்பதற்கான பொறுப்பு அந்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

TNPSC-க்கு நான்கு தொடர்ச்சியான தேர்வுகள் உள்ளன. அவை குழு 1, குழு 2, குழு 3 மற்றும் குழு 4. இதை தவிர குழு 5,6,7,8 தேர்வுகளும் நடத்தப்படுகிறது. அவை நேர்காணல் இடுகை மற்றும் நேர்காணல் அல்லாத பணிகள் என பிரிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக கூறினால் குரூப் 2 மற்றும் 2A ஆகும்.

Leave a Comment

error: Content is protected !!