TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? முக்கியத் தகவல்கள் TNPSC Group 4 2023 Notification Date

TNPSC Group 4 2023 Notification Date

TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்?

TNPSC Group 4 2023 Notification Date 2023ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விரைவில் வெளியிடயிருப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

2023ம் ஆண்டிற்கான போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தினை டிஎன்பிஎஸ்சி முன்னதாக  வெளியிட்டது . இதில், பல இலட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், நவம்பர் 12-ஆம் நாள் தீபாவளி கொண்டாடப்படும்  நிலையில் ,அதற்கு முன்னதாகவே குரூப் 4 தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியாகும் என்றும் எதிரிபார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் காலியிடங்கள்:

தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 10 ஆயிரம் குரூப் 4 நிலை பணியாளர்கள் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். காலியாகும் பணிகளை நிரப்ப வேண்டும் என்றாலும் கூட, ஆண்டுக்கு 10,000 குரூப் 4 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், 2012-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 10,718, 2017-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,351, 2019-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,398, 2022ம் ஆண்டு அறிவிக்கையன் படி 10,117 என கடந்த 12 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் குறைவான குரூப் 4 பணியாளர்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.மேலும், தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே,  கடந்தாண்டை விட கூடுதலாக 5,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகள், ஒரே நிலை எழுத்துத் தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதால், தேர்வர்களுக்குள் கடும் போட்டி நிலவும் என்றும், இதனால் கட்- ஆப் மதிப்பெண் அதிகரிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Group 4 2023 Notification Date
TNPSC Group 4 2023 Notification Date

குரூப் 4 தேர்வு எந்தெந்த பதவிகளுக்காக நடத்தப்படுகிறது?

  • ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத).
  • பில் கலெக்டர்.
  • தட்டச்சு செய்பவர்.
  • ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (கிரேடு -3).
  • கள ஆய்வாளர்
  • வரைவாளர்

குரூப் 4 தேர்வு (TNPSC Group 4 Exam) மேலே குறிப்பிட்டுள்ள 6 அரசு துறை பதவிகளுக்காக நடத்தப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 29 PSC தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வின் நேரம் மற்றும் தேர்வுக்கான தேதி மாநிலங்களுக்கு ஏற்றார் போல மாறுபடும்.

TNPSC குரூப் 4 தேர்வு எப்போது?

2023ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தொடர்பான அறிவிப்பாணை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு காலிப் பணியிடங்கள் உள்ளது என்பதற்கான விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் எப்போதும் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு உள்ள நிலையில் அது சார்ந்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்தியாவில் முக்கியமாக 2 வகையான PSC தேர்வு நடத்தப்படுகிறது. ஒன்று UPSC, அதாவது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேசிய அளவில் நடத்தப்படும் மத்திய அரசு தேர்வு. மற்றொன்று, PSC – அதாவது பொது சேவை ஆணையம் தேர்வு ஆகும்.

டிஎன்பிஎஸ்சி என்பது தமிழக அரசுப் பணிக்குத் (TNPSC Group IV) தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பாகும். அரசுப்பணியாளர் தேர்வாணையம் (PSC – Public Service Commission) இந்திய அரசால் 1929 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அந்தந்த மாநிலத்தின் பொது சேவையில் பணியாளர்களை சேர்ப்பதற்கான பொறுப்பு அந்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

TNPSC-க்கு நான்கு தொடர்ச்சியான தேர்வுகள் உள்ளன. அவை குழு 1, குழு 2, குழு 3 மற்றும் குழு 4. இதை தவிர குழு 5,6,7,8 தேர்வுகளும் நடத்தப்படுகிறது. அவை நேர்காணல் இடுகை மற்றும் நேர்காணல் அல்லாத பணிகள் என பிரிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக கூறினால் குரூப் 2 மற்றும் 2A ஆகும்.

 

1 thought on “TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? முக்கியத் தகவல்கள் TNPSC Group 4 2023 Notification Date”

Leave a Comment

error: Content is protected !!