ரூ.52,400 சம்பளத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு TNHRCE Thiruchendur Recruitment 2023

TNHRCE Thiruchendur Recruitment 2023

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதி உள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.   காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இந்து சமய அறநிலையத் துறை

இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காகத் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு 1 சனவரி 1960 முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.[1][2] அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிர்வகத்துடன் அரசின் யானைகள் புத்துணர்வு முகாம், அன்னதானத் திட்டம் போன்ற பணிகளையும் இத்துறை செய்கிறது.

TNHRCE Thiruchendur Recruitment 2023 Info

நிறுவனம் இந்து சமய அறநிலையத் துறை
வேலை வகை  தமிழ்நாடு அரசு வேலைகள்
பதவி உதவி மின் கம்பியாளர் 
கல்வித் தகுதி 10th
பணியிடம் திருச்செந்தூர்
சம்பளம் ரூ.52,400
அறிவிப்பு தேதி 5.10.2023
விண்ணப்ப முறை Offline

பணி விவரம்:

உதவி மின் கம்பியாளர்

கல்வித் தகுதி

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/ மின் கம்பி பணியாளர் தொழில் பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து ‘H’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

TNHRCE Thiruchendur Recruitment 2023
TNHRCE Thiruchendur Recruitment 2023

ஊதிய விவரம்

இதற்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு Pay Matric level 18-ன் படி ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

இதர நிபந்தனைகள்

இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். . இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு குறித்து தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

அஞ்சலில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர்/செயல் அலுவலர்,

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,

திருச்செந்தூர் – 628215,

தூத்துக்குடி மாவட்டம்.

தொலைப்பேசி எண் : 04639-242221.

https://hrce.tn.gov.in/hrcehome/index.php – என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 30.10.2023 மாலை 05.45 மணி வரை

இது குறித்த முழு விவரத்திற்கு https://drive.google.com/file/d/19vZrd03fzGM3bIzQWyI3iyD4H4CLePcs/view – என்ற லிங்கை க்ளிக் செய்து காணலாம்.

Leave a Comment

error: Content is protected !!