தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உதவித் தொகை திட்டம்.. உடனே விண்ணப்பியுங்கள் TN TRB CMRF Scheme 2023

TN TRB CMRF Scheme 2023

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டு முனைவர் பட்டம் பெற விரும்புவோருக்கு அருமையான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, முதலமைச்சர் ஆராய்ச்சி முனைவர் பட்ட தகுதி தேர்வு (Chief Minister Research Fellowship – CMRF) என்ற பெயரில் தேர்வு எழுத ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அழைப்பு விடுத்துள்ளது. இதில் தேர்வு பெறுவோருக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இந்நிலையில் 2023-24ஆம் கல்வியாண்டில் முதலமைச்சர் ஆராய்ச்சி முனைவர் பட்ட தகுதி தேர்வு எழுத ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 15 மாலை 5 மணி. மொத்தம் 120 பேர் தேர்வு செய்யப்படுவர். அதில் கலை, மனித வளம், சமூக அறிவியல் பிரிவில் 60 பேரும், அறிவியல் பிரிவில் 60 பேரும் அடங்குவர்.

பிரிவுகள்

அதிலும் கலை, மனித வளம், சமூக அறிவியல் பிரிவின் கீழ் தமிழ், ஆங்கில இலக்கியம் – 10 பேர், வரலாறு, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, புவியியல் – 10 பேர், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் – 10 பேர், வர்த்தகம், மேலாண்மை கல்வி, சமூகப் பணி – 10 பேர், பொருளாதாரம் – 10 பேர், ஊடகவியல், பத்திரிகை மற்றும் மாஸ் கம்யூனிகேஷன், இசை, ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன், நூலகம் மற்றும் தகவல் அறிவியல், உடற்கல்வி, உளவியல் – 10 பேர் என இடம் ஒதுக்கப்படுகிறது. அறிவியல் பிரிவின் கீழ் கணிதம் / புள்ளியியல் – 10 பேர், இயற்பியல் / எலக்ட்ரானிக்ஸ் – 10 பேர், வேதியியல் / உயிர் வேதியியல் – 10 பேர், தாவரவியல், விலங்கியல், உயிரியல், உயிர் தொழில்நுட்பவியல் – 10 பேர், கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பவியல் – 10 பேர், சுற்றுச்சூழல் அறிவியல்/ மண்ணியல் / ஹோம் சயின்ஸ் – 10 பேர் என இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN TRB CMRF Scheme 2023
TN TRB CMRF Scheme 2023

தேர்வு மற்றும் மதிப்பெண்களும்

இந்த தேர்வை எழுத விண்ணப்பக் கட்டணம், தேர்வு கட்டணம், பதிவுக் கட்டணம் என ஏதும் இல்லை. மொத்தம் 3 நேரம் நடைபெறும் தேர்விற்கான மொத்த மதிப்பெண் 100. இதில் இரண்டு பகுதிகள் இடம்பெறும். முதல் பகுதியில் கொள்குறி வினாக்கள் 40 அடங்கும். நெகடிவ் மதிப்பெண்களும் வழங்கப்படும்.

தேர்வு தேதி

இரண்டாம் பகுதியில் கட்டுரை வடிவில் பதில் அளிக்கும் வகையில் 60 மதிப்பெண்களுக்கு 6 கேள்விகள் இடம்பெறும். இதற்காக தகுதி மற்றும் இணைக்க வேண்டிய சான்றுகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://trb.tn.nic.in/) விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு தேதி ஹால் டிக்கெட்கள் இடம்பெற்றிருக்கும். எனவே தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

More Govt Jobs

தமிழ்நாடு அரசு பணிகள் – Click here

மத்திய அரசு பணிகள் – Click here

10, 12 தேர்ச்சி பணிகள் – Click here

வங்கி பணிகள் – Click here

நர்சிங் பணிகள் – Click here

Leave a Comment

error: Content is protected !!