தமிழகத்தில் தொடர் விடுமுறை – தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு TN October 2023 Holidays

TN October 2023 Holidays

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே மிகுவும் மகிழ்ச்சி தான். தினமும் பள்ளிக்கு சென்று வீட்டு படங்களை தினமும் செய்து முடித்து, பாடங்களை தொடர்ச்சியாக கவனித்து வரும் மாணவர்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வந்தால் பெரும் மகிழ்ச்சி தான்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

ஒரு நாள் விடுமுறை என்றாலும் மாணவர்கள் அதனை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கும் தேதி கடும் வெயில் தாக்கம் காரணமாக இருமுறை மாற்றி அமைக்கப்பட்டது.

பள்ளிகள் துவங்கிய உடன் அடுத்த வாரமே மழை காரணமாக இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது.

தற்போது மாணவர்கள் மீண்டும் எப்போது விடுமுறை கிடைக்கும் என ஆவலுடன் உள்ளனர். அவர்களுக்கு ஒரு நற்செய்தி

இந்த ஆண்டு ஆயுதபூஜை அக்டோபர் 23ஆம் தேதி திங்கள் கிழமையும், விஜயதசமி 24ஆம் தேதி செவ்வாய்க் கிழமையும் வருகிறது. இதனுடன் சேர்த்து சனி, ஞாயிறு விடுமுறையையும் சேர்த்து நான்கு நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது.

இதனால் கல்வி, தொழில், வேலை நிமித்தம் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவார்கள். நான்கு நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா சென்றுவரவும் பலர் திட்டமிடுவார்கள். ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்கள் மாநிலத்தில் குறுக்கும் நெடுக்குமாக பயணம் போக காத்திருக்கின்றனர்.

TN October 2023 Holidays
TN October 2023 Holidays

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

தொடர் விடுமுறை, பண்டிகை காலங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு பேருந்துகள் தமிழக அரசால் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக வெள்ளிக் கிழமை (அக்டோபர் 20) முதலே முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படுகிறது. 20, 21 என சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதாவது சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,665 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பெங்களூரு, கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட பிற ஊர்களுக்கு திரும்புவதற்கு வசதியாகவும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஒரே நேரத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குவிவதை தடுக்க கோயம்பேடு, தாம்பரம், பூவிருந்தமல்லி பைபாஸ் ஆகிய 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து இயக்கப்படும்.காஞ்சி, திருத்தணி, ஓசூர், திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்கு பூவிருந்தமல்லி பைபாஸ் நிறுத்தத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

More Govt Jobs

தமிழ்நாடு அரசு பணிகள் – Click here

மத்திய அரசு பணிகள் – Click here

10, 12 தேர்ச்சி பணிகள் – Click here

வங்கி பணிகள் – Click here

நர்சிங் பணிகள் – Click here

Leave a Comment

error: Content is protected !!