தமிழ்நாடு நுண்ணறிவுப் பிரிவில் வேலைவாய்ப்பு – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு TN Govt Anti Terrorism Squad Announcement 2023

தமிழக காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் 383 பணியாளர்களைக் கொண்ட ‘தீவிரவாத தடுப்புப் பிரிவு’ அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின், 57.51 கோடி செலவில் தமிழக காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் 380-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட ‘தீவிரவாத தடுப்புப் பிரிவு’ அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

TN Govt Anti Terrorism Squad Announcement 2023
TN Govt Anti Terrorism Squad Announcement 2023

கோவை உக்கடம்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் அருகேயுள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு, கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்த முபினின் வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப் பொருட்கள், ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு வாசகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இந்த கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த தீவிரவாத சதிச்செயல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தான், ‘தீவிரவாத தடுப்புப் பிரிவு’ அமைக்கப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இதைத்தொடர்ந்து, தமிழக காவல்துறை டிஜிபி, தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பதற்கான முன்மொழிவு கடிதத்தையும், இந்த பிரிவை தொடங்குவதற்கான அத்தியாவசிய நிர்வாகச் செலவினங்களுக்காக ரூ.60 கோடி ஒதுக்கக் கோரியும் கடிதம் அளித்திருந்தார். அதனை ஏற்ற தமிழக அரசு, தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

383 பணியாளர்களை

தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு 383 பணியாளர்களை சேர்க்கவும், 89 புதிய வாகனங்களை ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கான ஊதியம், நிர்வாகச் செலவுகள், கட்டணங்கள், வாடகை என ரூ.57 கோடி ரூபாய் மற்றும் திரும்பப் பெறப்படாத செலவினமாக தளவாடச் செலவுகளுக்காக ரூ.26 கோடியையும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், புதிதாக தொடங்கப்படும் இந்த தீவிரவாத தடுப்புப் பிரிவு, தமிழக காவல்துறை நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி மேற்பார்வையின் கீழ் செயல்படும் என்றும், இந்த பிரிவு, தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நிகழும் குற்றங்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்துடன் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Click here to download notification

Leave a Comment

error: Content is protected !!