சிறுநீரகத்தை பாதுகாக்க எளிய வழிகள் tips to save kidneys in tamil

Tips to save kidneys in tamil

நீங்கள் சாப்பிடும் உணவுகள் முதல் நீங்கள் குடிக்கும் பானம் வரை, உங்கள் உடல் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது. உங்கள் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்துதான், உடல் எடுக்கிறது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

உங்கள் உணவுகளை பொறுத்து, அவை உங்கள் ஆரோக்கியத்தை பாதுக்காக்கலாம் அல்லது பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆரோக்கியமற்ற உணவுகள், உங்கள் முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கும். அத்தகைய ஒரு உறுப்பு சிறுநீரகம் ஆகும். சிறுநீரகம், சிறுநீரை உருவாக்குவதற்கும் உடலின் வளர்சிதை மாற்றக் கழிவுகளை சுரப்பதற்கும் இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இருப்பினும், சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் சாப்பிடும் உணவில் சில உணவுகளைச் சேர்ப்பது சிறுநீரகங்களை சிறப்பாகச் சுத்தப்படுத்தவும், சிறந்த செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவும். உங்கள் சிறுநீரகத்தை சுத்தப்படுத்த உதவும் உணவுகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

tips to save kidneys in tamil
tips to save kidneys in tamil

தண்ணீர்

சிறுநீரகத்தை சுத்தப்படுத்துவதிலும், நச்சுத்தன்மையை நீக்குவதிலும் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், இது உணவுகளின் பட்டியலில் கணக்கிடப்படுவதில்லை. எப்போதும் உங்களை நீரேற்றமாக வைத்திருப்பதில் கவனமாக இருங்கள். ஏனெனில், நீரேற்றமாக இருப்பது நச்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், சிறுநீரகங்களை இயற்கையாக சரிசெய்வதற்கும் பெரிதும் உதவுகிறது.

குருதிநெல்லி

பொதுவாக பெர்ரிகள் உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். அவற்றில் ஒன்று கிரான்பெர்ரி. இதை குருதிநெல்லி என்று தமிழில் அழைப்பார்கள். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, குருதிநெல்லி சாறு உட்கொள்வது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவும். இது பெரும்பாலும் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் அழுத்தத்தை உருவாக்குகிறது. இதனால், சிறுநீரகத்தில் இருந்து கழிவுகள் உடனே வெளியேற்றப்படுகின்றன.

கொழுப்பு

மீன் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் ஓர் முக்கியமான ஊட்டச்சத்து ஒமேகா 3 கொழுப்பு அமிலம். சால்மன், டுனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை உட்கொள்வது சிறுநீரக ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும். தேசிய சிறுநீரக அறக்கட்டளையின் ஆய்வின்படி, ஒமேகா -3 கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தை சற்று குறைக்கவும் உதவும். உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக நோய்க்கான ஆபத்து காரணியாகும். அதைக் குறைக்க இயற்கையான வழிகளைக் கண்டறிவது சிறுநீரகத்தைப் பாதுகாக்க உதவும்.

சிட்ரஸ் பழங்கள்

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது போதுமான நீரேற்றத்தை அளிக்கும் மற்றும் சிறுநீரகத்திலிருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். இந்த பழங்களில் அதிகளவு சிட்ரேட் இருப்பதால், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். அவை உங்கள் சிறுநீரின் அமிலத்தன்மையை குறைக்கலாம். இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது. உங்கள் உணவில் புத்துணர்ச்சி மற்றும் ஈரப்பதமூட்டவும் கூடுதலாக இருக்கும் வெள்ளரி, ஒரு டையூரிடிக் விளைவைக் கொண்டிருக்கின்றன. வெள்ளரிக்காயை நீங்கள் தினமும் சாப்பிடுவதன் மூலம், நீரேற்றமாக இருக்கலாம். அத்துடன் இவை சிறுநீரக கற்களைத் தடுக்க உதவுகிறது மற்றும் சிறந்த சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிக்க உதவுகிறது.

செலரி

செலரி ஒரு குறைந்த கலோரி கொண்ட காய்கறியாகும். இது ஒரு இயற்கை டையூரிடிக் ஆக செயல்படுகிறது. மேலும், இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.

Leave a Comment

error: Content is protected !!