தமிழக மின் வாரியத் துறையில் 55,295 காலி பணியிடங்கள் TANGEDCO Jobs Info 2023

TANGEDCO Jobs Info 2023

தமிழக மின்வாரிய துறையில் 55,295 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

மின்வாரிய துறை:

தமிழக மின்வாரியத் துறையில் தொழில்நுட்பம், கணக்கு, தணிக்கை, செயலகம், நிர்வாகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் ஆகிய பதவிகளில் 1.45 லட்சம் காலிபணியிடங்கள் இருந்தன. இதில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டுமே 88,774 பணியிடம் நிரப்பப்பட்ட நிலையில் தற்போது 55, 295 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக மின்வாரியத்துறை முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும், 55000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் மின் பழுதுகளை சரிபார்ப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினை வைத்துள்ளனர்..

TANGEDCO Jobs Info 2023

நிறுவனம் தமிழ்நாடு மின்சார வாரியம்
வேலை வகை  தமிழ்நாடு அரசு வேலைகள்
பதவி உதவி பொறியாளர்,

கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் மற்றும் பல பதவிகளுக்கு

கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு,

10 ஆம் வகுப்பு, Degree

காலியிடங்கள்  50000+
பணியிடம்  தமிழ்நாடு
அறிவிப்பு தேதி Updating
விண்ணப்ப முறை ஆன்லைன்
TANGEDCO Jobs Info 2023
TANGEDCO Jobs Info 2023

ஒவ்வொரு மின் அலுவலகத்திலும், ஆயிரக்கணக்கான மின் இணைப்புகள் உள்ளன. கூடுதல் அலுவலகங்களை கவனிக்கவேண்டியுள்ளதால், மின் வாரிய அதிகாரிகளுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. மின் கணக்கீட்டாளர், பணம் வசூலிப்போரும் குறைவாகவே உள்ளனர். இதனால் மின் நுகர்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதனால், உடனடியாக காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மின்வாரிய துறைக்கு கோரிக்கையினை வைத்துள்ளனர். இது தொடர்பாக மின்வாரியத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உடனடியாக அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு ஒப்புதல் தர வேண்டும் எனவும், ஒப்பந்த ஊழியர்களை நியமிக்காமல் நிரந்தர அடிப்படையில் ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் எனவும், இதில் முதற்கட்டமாக 5000 ஊழியர்களையாவது நியமிக்க தமிழக அரசு ஒப்புதல் தர வேண்டும் எனவும் மின்வாரியத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் என 85 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. 2020 ஆம் ஆண்டின் துவக்கத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து 600 உதவி பொறியாளர், 1300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர் – கணக்கு ஆகிய பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புக்கு இன்ஜினியரிங் உட்பட 2 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். கொரோனா பரவல் காரணமாக, இதுவரை அதற்கான தேர்வு நடத்தப்படவில்லை. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பித்தவர்கள், அதற்கான தேர்வை விரைவாக நடத்துமாறு தமிழக மின்வாரியத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையொட்டி இந்த பதவிகளுக்கான மறு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தமிழ்நாடு மின்சார வாரிய பணிகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியாகும் பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழுமையான விண்ணப்ப செயல்முறையை அறிய, கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்:

 1. தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) இன் அதிகார்வப்பூர்வ வலைத்தளமான https://www.tangedco.gov.in/ க்கு
  செல்லவும்.
 2. இதில் ‘Recruitment -> Careers -> Advertisement menu’ என்பதை கிளிக் செய்யவும்.
  அதிகார்வப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு படிக்கவும், பின்பு ஆன்லைன் விண்ணப்ப இணைப்பை கிளிக் செய்யவும்.
 3. தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்.
 4. தேவையான அனைத்து ஆவணங்களையும் அறிவிக்கப்பட்ட வடிவத்திலும், அளவிலும் பதிவேற்றவும்.
 5. இறுதியாக, பதிவுசெய்யப்பட்ட விவரங்கள் சரியானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதி செய்து, பின்னர் சமர்ப்பிக்கவும்.
 6. அடுத்து, விண்ணப்ப கட்டணம் கேட்டால், அறிவிக்கப்பட்ட பயன்முறையின் படி கட்டணம் செலுத்துங்கள், இல்லையெனில் அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள்.
 7. இறுதியாக விண்ணப்ப படிவத்தை எதிர்கால பயன்பாட்டிற்கு நகல் எடுத்துக்கொள்ளுங்கள்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், வாரியம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடும் தகுதி வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். வாரியம் ஒவ்வொரு பதவிக்கும் அறிவிக்கும் வயது வரம்பையும், கல்வி தகுதியையும் விண்ணப்பதாரர் பெற்றிருந்தால் மட்டுமே, அவர் அந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த தகுதி ஆனது, ஒவ்வொரு பதவிக்கும் மாறுபடும். பொதுப் பிரிவில் உள்ள விண்ணப்பதாரர்களை தவிர, வேறு பிரிவுகளை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு இருக்கும்.

தேர்வு செய்யும் முறை

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள், எழுத்து தேர்வு / நேர்காணலின் அடிப்படையில் நிரப்பப்படும். தேர்வு முறை பற்றிய முழுமையான விவரங்களை, மின்சார வாரியம் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடும்..

Tamil Nadu Electricity Board Recruitment Salary Details
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள சில பதவிகளுக்கான ஊதிய விவரங்களை அவற்றின் கல்வி தகுதிகளுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் நாங்கள் உங்களுக்கு வழங்கி உள்ளோம்.

கல்வித் தகுதி :

Post Name Qualification
Assistant Accounts Officer  CA
Field Assistant (Trainee)   ITI
 Junior Assistant (Accounts) B.Com
 Assistant Engineer Degree
Assessor Degree

 

சம்பள விவரங்கள்

Post Name Salary
Assistant Accounts Officer Rs. 60155 – 92965/-
Field Assistant (Trainee) Rs.18800-59900/-
 Junior Assistant (Accounts) 19500 – 62000/-
 Assistant Engineer 39800-126500/-
Assessor 19500 – 62000/-

 

முக்கிய தகவல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  தற்போது மின் வாரிய பணிகளுக்கான பாடத்திட்டம் , கேள்வி தாள் முறை ஆகியவற்றை தயார் செய்ய அறிவித்துள்ளது. எனவே தேர்வர்கள் இத்தேர்வு தயார் நிலையில் இருக்க வேண்டும்

தமிழ்நாடு மின்சார வாரியம் தனது வலைத்தளத்தில், மேலே கூறப்பட்ட பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட உடன், அதற்கான விண்ணப்ப இணைப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நமது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குழுவில் இணையுங்கள்  – Click here to Join Our WhatsApp Group

Check More Govt Jobs

தமிழ்நாடு அரசு பணிகள் – Click here

மத்திய அரசு பணிகள் – Click here

10, 12 தேர்ச்சி பணிகள் – Click here

வங்கி பணிகள் – Click here

நர்சிங் பணிகள் – Click here

1 thought on “தமிழக மின் வாரியத் துறையில் 55,295 காலி பணியிடங்கள் TANGEDCO Jobs Info 2023”

Leave a Comment

error: Content is protected !!