ரூ.10,000 விலையில் 5G Phone இந்தியாவில் விரைவில் அறிமுகம்..! Smartphone Underphone Rs 10000 to launch in India

ஐடெல் நிறுவனம்

ஐடெல் என்ற நிறுவனம் இதை இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே பட்ஜெட் விலையில் ஃபோன்களை அறிமுகம் செய்வதில் ஐடெல் நிறுவனம் தனி இடத்தை தக்க வைத்துள்ளது. இந்த நிலையில் 5ஜி மார்க்கெட் பிரிவிலும் நுழைய இருக்கிறது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

முன்னதாக, 2023ஆம் ஆண்டின் இறுதிக்குள்ளாக, பல நிறுவனங்களின் 5ஜி தயாரிப்புகளை நாம் எதிர்பார்க்க முடியும் என்று இந்தத் தொழில்துறை சார்ந்த வல்லுநர்கள் கூறி வந்தனர். அந்த வகையில் இனி வரக் கூடிய மாதங்களில் பல நிறுவனங்கள் 5ஜி ஃபோன்களை அறிமுகம் செய்ய இருப்பதாகத் தெரிகிறது.

5ஜி சேவை

நாட்டில் முதன்முதலாக பட்ஜெட் விலையில் 5ஜி சேவை கொண்ட செல்ஃபோனை அறிமுகம் செய்வது ஐடெல்லாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 5ஜி இணைய சேவை பயன்பாடு மற்றும் கூடுதலாக ஆப்களை இன்ஸ்டால் செய்வது போன்ற நடவடிக்கைகளுக்கு 4ஜிபி ரேம் வசதி கொண்ட ஃபோன் தேவை என்ற நிலையில், அதற்கு இணையான அல்லது 6ஜிபி ரேம் வசதியுடன் அறிமுகம் செய்ய ஐடெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஐடெல் நிறுவனம் சார்பில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஃபோனில் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. வால்யூம் மற்றும் பவர் பட்டன் ஆகியவை வலப்புறத்தில் அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. Transsion Holdings என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஐடெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் சார்பில் மேலும் பல பிராண்டுகளின் பெயரால் செல்ஃபோன்கள் தயாரிக்கப்படுகின்றன.

Smartphone Underphone Rs 10000 to launch in India
Smartphone Underphone Rs 10000 to launch in India

ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில்

இந்தியாவில் 5ஜி இன்டர்நெட் சேவைகள் அறிமுகம் ஆகி பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், மக்கள் மெல்ல, மெல்ல அந்த சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஏற்கனவே கைவசம் இருக்கின்ற 4ஜி சேவைத் திறன் கொண்ட செல்ஃபோன்களை உடனடியாக மாற்றிவிட முடியாது என்ற நிலையிலும், 5ஜி ஃபோன்களின் விலை கூடுதலாக இருக்கிறது என்ற நிலையிலும், 5ஜி சேவைக்கான நகர்வு மெதுவாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு கட்டுப்படியாகும் வகையில் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் 5ஜி ஃபோன்கள் வெகு விரைவில் அறிமுகம் ஆக உள்ளன. நம் நாட்டைப் பொருத்தவரையிலும், 5ஜி சேவையின் வேகத்திற்கும், 4ஜி சேவையின் வேகத்திற்கும் இடையே பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. அதே சமயம், குறைவான விலையில் செல்ஃபோன் வாங்கி, 5ஜி வேகத்தை அனுபவிக்க விரும்பும் மக்களுக்கு இது பலனளிக்கும் என்று கருதப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!