நேர்காணல் மூலம் அரசு வேலை வாய்ப்பு ; குவிந்த இளைஞர்கள் Kerala Peon Job Youth Rush Lines Up

தகுதியான வேலை

உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு நம் இந்தியா. அதே சமயம் அதிகமானோர் வேலையில்லாமல் இருப்பதும் நம் நாட்டில்தான். கல்வியின் தரம் நம் நாட்டில் நன்றாக இருந்தாலும், கல்வி கற்ற பிறகு இளைஞர்களுக்கு தகுதியான வேலை கிடைப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று கேரளாவில் அரங்கேறியுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

ஒரு அரசு அலுவலகத்தில் பியூன் வேலை காலியாக இருந்தது. அந்த காலியிடத்தை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அறிவிப்பை பார்த்தவுடன் அங்கு ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். இதில் கொடுமை என்னவென்றால் அவர்களில் 90 சதவீதம் பேர் பட்டதாரிககள். அதுவும் பி.டெக் படித்த பொறியியல் பட்டதாரிகளாக இருந்தனர்.

கொச்சி, கேரளாவில் அரசு அலுவலகத்தில் பியூன் வேலைக்கான நேர்காணலுக்கு என்ஜினியரிங், பி.டெக் படித்தவர்கள் அதிகளவில் குவிந்தனர்.

கேரளாவில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் காலியாக உள்ள பியூன் வேலைக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் தேர்வு எர்ணாகுளத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் வேலைக்காக திரண்டனர்.

Kerala Peon Job Youth Rush Lines Up
Kerala Peon Job Youth Rush Lines Up

அரசு வேலை

அரசு வேலை, நல்ல சம்பளம் என்பதால் இந்த வேலைக்காக என்ஜினீயரிங், பி.டெக். படித்து முடித்தவர்கள், பட்டதாரிகள் என 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பியூன் வேலைக்கான நேர்காணலுக்கு அதிகாலையிலேயே திரண்டனர்.

என்ஜினீயரிங், பி.டெக் போன்ற படிப்புகள் படித்து விட்டு வேலை கிடைக்காமல் உணவு டெலிவரி, கால்டாக்சி டிரைவர் வேலைகள் செய்வதற்கு பதிலாக இந்த வேலை பாதுகாப்பானது என்பதாலும், அரசு வேலை என்பதாலும் இதில் சேர ஆர்வமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற சைக்கிள் ஓட்டும் தேர்வில் 101 பட்டதாரிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அவர்களுக்கு இன்னும் சில தேர்வுகள் உள்ளன. அவற்றையும் கடந்த பிறகுதான் தரவரிசை பட்டியல் தயாராகும். அதன்பிறகே வேலை யாருக்கு கிடைக்கும் என்பது அறிவிக்கப்பட உள்ளது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2022-ம் ஆண்டு உள்ள தகவல்களின் படி கேரளாவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 5.1 லட்சமாக உள்ளது. இதில் 3.2 லட்சம் பேர் பெண்கள் ஆவார். மற்ற மாநிலங்களை விட இது அதிகமாகும்.

பியூன் வேலையில் சேருவதற்கு அடிப்படை தகுதி 7-ம் வகுப்பு படித்திருந்தாலே போதும். ஆனால் நன்கு சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு மாதம் ரூ. 23 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.

Check More Govt Jobs

தமிழ்நாடு அரசு பணிகள் – Click here

மத்திய அரசு பணிகள் – Click here

10, 12 தேர்ச்சி பணிகள் – Click here

வங்கி பணிகள் – Click here

Leave a Comment

error: Content is protected !!