உங்கள் போனுக்கு அபாய எச்சரிக்கை மெசேஜ் வருகிறதா..? இதுதான் அதற்கு காரணம்..! emergency message on phone by government in tamil

Emergency message on phone by government in tamil

நாட்டில் ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அதன் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், மத்திய அரசு ஒரு எச்சரிக்கை குறுந்தகவலை, ஃபிளாஷ் மெசேஜாக யூசர்களுக்கு அனுப்பி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த குறுந்தகவலில் ‘எச்சரிக்கை – அதிதீவிரம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், “இது வெறும் சோதனைக்காக அனுப்பப்பட்டது. இதற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள தேவையில்லை” என அதில் கூறப்பட்டிருந்தது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இந்த செய்தி பொது பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், அவசர காலங்களில் சரியான நேரத்தில் விழிப்பூட்டல்களை வழங்குவதற்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அவசர எச்சரிக்கை சமிக்ஞை முறையின் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது.

emergency message on phone by government in tamil
emergency message on phone by government in tamil

ஃபிளாஷ் செய்தி செப்டம்பர் 15ம் தேதி பகல் 12:00 மணிமுதல் 12:44 மணிக்கு இடையில் ஜியோ, பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம் தொலைத்தொடர்பு துறை (சி-டாட்) அனுப்பியது. மேலும், இது ஒரு சோதனை என்று மெசேஜ் அனுப்பப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுக்காக எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

“இது இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறையின் செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனை செய்தி ஆகும். தயவுசெய்து இந்த செய்தியைத் தொடர்ந்து இதற்காக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. பார்த்துவிட்டு செய்தியை புறக்கணித்து விடவும். இந்த செய்தி நாடு முழுவதிலும் உள்ள மொபைல் யூசர்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால், அவசர எச்சரிக்கை முறையை செயல்படுத்த அனுப்பப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும் அவசர காலங்களில் சரியான நேரத்தில் நோக்கிஃபிகேஷன்கள் வழங்குவதையும் இந்த செய்தி நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று தொலைத்தொடர்பு துறையின் கீழ் இயங்கும் செல் பிராட்காஸ்டிங் அமைப்பு தெரிவித்துள்ளது.

பல இடங்களில் இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைப்பு தனது அறிக்கையில் தெளிவுபடுத்தி உள்ளது. அவசர காலங்களின் மக்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த சேவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் மொபைல் வழியாக அரசின் எச்சரிக்கைகளை எளிதில் தெரிந்துகொள்ள இந்த முயற்சி உதவும் என்று தொலைத்தொடர்பு துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், நாட்டின் பெரிய மொபைல் நெட்வெர்க் ஆன ஜியோ ஆகியவற்றின் யூசர்களுக்கு இந்த தகவல் அனுப்பப்பட்டு சோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ள அமைப்பு, விரைவில் உள்நாட்டில் இருக்கும் அனைத்து மொபைல் சந்தாதாரர்களுக்கும் இந்த செய்தி அனுப்பப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது. எனவே, இதன் விவரங்களை சரியாகப் புரிந்து கொண்டு மக்கள் பதற்றமடையாமல் இருக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

More Govt Jobs

தமிழ்நாடு அரசு பணிகள் – Click here

மத்திய அரசு பணிகள் – Click here

10, 12 தேர்ச்சி பணிகள் – Click here

வங்கி பணிகள் – Click here

நர்சிங் பணிகள் – Click here

Leave a Comment

error: Content is protected !!